ETV Bharat / state

யானையை ஆய்வு செய்த சிறப்புக் கமிட்டியினரை தடுத்து நிறுத்திய பாஜகவினர்! - யானையை ஆய்வு செய்த சிறப்புக் கமிட்டியினருக்கு அனுமதி இல்லை

மயிலாடுதுறை மாயூரநாதர் கோயில் யானையை ஆய்வு செய்த சிறப்புக் கமிட்டியினருக்கும் பாஜக, இந்து அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

யானையை ஆய்வு செய்த சிறப்புக் கமிட்டி
யானையை ஆய்வு செய்த சிறப்புக் கமிட்டி
author img

By

Published : Feb 8, 2022, 6:14 PM IST

மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் உள்ள கோயில் மற்றும் தனியார் வளர்ப்பு யானைகள், தமிழ்நாடு வளர்ப்பு யானைகள் பராமரிப்புச் சட்டம் 2011-இன்படி பராமரிக்கப்பட வேண்டும்.

ஆனால், மயிலாடுதுறை மாயூரநாதர்கோயில் யானை அபயாம்பிகை, திருச்சி மலைக்கோட்டை யானை லட்சுமி, திருப்பரங்குன்றம் கோயில் யானை தெய்வானை, குன்றக்குடி கோயில் யானை சுப்புலட்சுமி ஆகிய நான்கு யானைகள் 2011 சட்ட விதிகளின்படி பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனையடுத்து தமிழ்நாடு அரசின் வனத்துறை சார்பில் சிறப்புக் கமிட்டி அமைக்கப்பட்டு, இந்த நான்கு யானைகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

யானையை ஆய்வு செய்த சிறப்புக் கமிட்டியினருக்கு உரிய அனுமதி இல்லை

அதன்படி தமிழ்நாடு வனத்துறையின் சிறப்புக்கமிட்டி, டெல்லி வைல்ட் லைஃப் டிரஸ்ட் ஆப் இந்தியா துணைத் தலைவர் டாக்டர் அஷ்ரப் தலைமையில் விலங்குகள் நல ஆர்வலர்கள் சென்னை ஆண்டனி, ரமேஷ் மற்றும் யானைகள் ஆராய்ச்சியாளர் டாக்டர் சிவகணேசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலுக்கு வந்தனர்.

தொடர்ந்து அவர்கள் கோயில் யானை அபயாம்பிகையைப் பார்வையிட்டு, பராமரிப்புகள் குறித்து ஆய்வு செய்ததுடன், உயரம், நடக்கும் தன்மை, பாதிப்பின் தன்மை ஆகியவற்றைப் பரிசோதித்தனர்.

யானையை ஆய்வு செய்த சிறப்புக் கமிட்டியினருக்கு அனுமதி இல்லை

மேலும் அக்குழுவினர் யானைக்கு வழங்கப்படும் உணவு மருத்துவம் உள்ளிட்டவைகள் குறித்து பாகனிடம் கேட்டறிந்ததுடன், யானைக்கான ஆவணங்களையும் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து இந்த குழுவினர் அனைத்து யானைகளையும் ஆய்வு செய்த பின்னர் இதுகுறித்த அறிக்கையை தமிழ்நாடு அரசுக்கு சமர்ப்பிக்க உள்ளனர்.

ஆய்வுக் குழுவினர் தங்களது ஆய்வை முடித்துவிட்டு புறப்படத்தயாராக இருந்த நிலையில், அங்கு வந்த மயிலாடுதுறை நகர பாஜக தலைவர் மோடி கண்ணன், இந்து முன்னணி நகரச்செயலாளர் சாமிநாதன் தலைமையிலான பாஜக, இந்து முன்னணி, இந்து மகா சபா ஆகியவற்றின் நிர்வாகிகள் ஆய்வுக்குழுவினரை தடுத்து நிறுத்தியதுடன், அவர்கள் வெளியேற முடியாதபடி கோயில் வாயிலை மூடியும்; வனத்துறை வாகனத்தை மறித்தும் வாக்குவாதம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு அனுமதி இல்லாமல் ஆய்வு செய்வதாகவும்; அரசால் நியமிக்கப்பட்ட குழு என்பதற்கான நியமன ஆணையை காண்பிக்க வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த மயிலாடுதுறை காவல்துறை விரைந்து வந்து இரு தரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், குழுவினர் வசம் இருந்த அரசு ஆணையை காண்பித்த பின்னர், போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனையடுத்து ஆய்வுக்குழுவினர் புறப்பட்டுச் சென்றனர்.

இதையும் படிங்க: மாணவர்களை கல்லறைக்கு கொண்டு சென்ற நீட் தேர்வு தேவையா? - முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.