நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா. அனிமேஷன் துறையில் ஆர்வமுள்ள இவர் ரஜினியை வைத்து கோச்சடையான் எனும் படத்தையும், தனுஷ் ஹீரோவாக நடித்த வேலையில்லா பட்டதாரி-2 படத்தையும் இயக்கினார். பின்னர் நடிகரும் தொழிலதிபருமான விசாகன் வணங்காமுடி என்பவரை மறுமணம் செய்துக் கொண்டார். அப்போது அவர் திருமண கோலத்தில் தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் வைரலானது. அவ்வப்போது ட்விட்டர் தளத்தில் தன்னுடைய புகைப்படங்களை வெளிட்டு வருகிறார். சமீபத்தில் நீச்சல் குளத்தில் அவர் இருக்கும் படத்தை வெளியீட்டு நெட்டிசன்களிடம் கடும் கோபத்தை சம்பாதித்தார்.
இந்நிலையில், நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமியை சௌந்தர்யா இன்று சந்தித்து ஆசிபெற்றார். நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியலை முன்னெடுக்கப்போவதாக அறிவித்துள்ள நிலையில், அவரது மகள் தருமபுரம் ஆதீனத்தை சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.