ETV Bharat / state

'காவலன் செயலி' குறித்து விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம்

நாகை: பெண்கள் காவலன் செயலியை பயன்படுத்த வலியுறுத்தி மாவட்ட கண்காணிப்பாளர் சார்பில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.

sos
sos
author img

By

Published : Feb 2, 2020, 3:37 PM IST

நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துவரும் நிலையில், நாடு முழுவதும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக, அவசர நேரங்களில் பெண்கள், முதியோர் ஆகியோர் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு உதவியாகத் தமிழ்நாடு காவல் துறை 'காவலன் SOS' என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.

'காவலன் SOS' பயன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, விளம்பரப் பதாகைகளும் ஆங்காங்கே வைக்கப்படுகின்றன. அதனோடு, இச்செயலியை தரவிறக்கம் செய்வதன்மூலம், ஆபத்தில் இருக்கும் பெண்ணிற்கு அடுத்த சில நிமிடங்களிலேயே காவல் துறையின் பாதுகாப்பு கிடைத்துவிடும். முக்கியமாகத் தனியாகப் பயணிக்கும் அனைத்துப் பெண்களுமே காவலன் செயலியை தரவிறக்கம்செய்து வைத்துக்கொள்வது மிகவும் நல்லது எனக் காவல் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆபத்து காலங்களில் சிக்கிக்கொள்ளும் பெண்கள் அதிலிருந்து மீண்டுவர, காவலன் செயலியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

அதன் ஒருபகுதியாக நாகை மாவட்டம் அவுரித்திடல் பகுதியில் காவலன் செயலியை பெண்கள் தங்களது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்துகொள்ள வலியுறுத்தி காவல் துறை சார்பில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.

காவலன் செயலி குறித்து விழிப்புணர்வு

இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் பங்கேற்று மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டப்பந்தயத்தை கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்ட காவலர்கள், பெண் காவலர்கள் அனைவரும் காவலன் செயலியை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பதாகைகளைக் கையில் ஏந்தியவாறு சென்றனர்.

மாரத்தான் ஓட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த ஆண், பெண் காவலர்களுக்கு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

இதையும் படிங்க: காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு - கல்லூரி மாணவிகள் பங்கேற்பு

Intro:நாகையில், காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஏராளமான போலீஸார் பங்கேற்பு: Body:நாகையில், காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஏராளமான போலீஸார் பங்கேற்பு: பெண்கள், காவலன் செயலியை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்:

ஆபத்து காலங்களில் சிக்கிக்கொள்ளும் பெண்கள் அதிலிருந்து மீண்டுவர, காவலன் செயலியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி காவலன் செயலியை பெண்கள் தங்களது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று நாகையில் காவல்துறை சார்பில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.

நாகை அவுரித்திடலில் துவங்கிய மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டப் பந்தயத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.ஆண்களுக்கான 10 கிலோ மீட்டர் தூரம் ஓட்டம், நாகை அவுரிதிடலில் துவங்கி நாகூர் காவல் நிலையம் வரை சென்று மீண்டும் நாகை அவுரிதிடல் வந்தடைந்தனர். இதைப்போல் பெண்களுக்கான 5 கிலோமீட்டர்
ஓட்டத்தில் அவுரிதிடலில் துவங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை சென்று மீண்டும் அவுரிதிடல் வந்தடைந்தது.
மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்ட காவலர்கள் மற்றும் பெண் காவலர்கள் அனைவரும் காவலன் செயலியை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்று விழிப்புணர்வை ஏற்படுத்திய மாரத்தான் ஓட்டத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.