நாகை மாவட்டம் மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனியார் அறக்கட்டளை அமைப்பினர் சாலைகளில் அனாதைகளாக சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை தேடிப்பிடித்து அவர்களுக்கு தினந்தோறும் உணவு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் மார்கழி மாத குளிரில் நடுங்கி அவதிப்படும் ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்யும் விதமாக உணவுடன் சேர்த்து போர்வையும் வழங்கி வருகின்றனர்.
மயிலாடுதுறை பேருந்து நிலையம், ரயில்நிலையம் மற்றும் கடைவீதிகளில் அனாதைகளாக சுற்றி திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு போர்வை மற்றும் உணவு வழங்கிய சமூக அமைப்பினர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாகை மாவட்டம் முழுவதும் இச்சேவையை செய்ய இருப்பதாகவும், தங்கள் சேவைக்கு பொதுமக்கள் நிதி அளித்து உதவி செய்வதாகவும், இதனைக் கொண்டு சேவையாற்றி வருவதாக அறக்கட்டளையின் நிறுவனர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எறும்புத்தின்னி ஓடுகளை விற்பனை செய்துவந்த 4 பேர் கைது!