ETV Bharat / state

ஒரே நேரத்தில் உயிரிழந்த 6 மாடுகள்! - ஆறு மாடுகள் உயிரிழப்பு

மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே பால் வியாபாரி வளர்த்து வந்த ஆறு மாடுகள் சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்தன. இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Six cows died simultaneously in Mayiladuthurai

author img

By

Published : Aug 23, 2020, 4:04 PM IST

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்ட காவல் சரகத்திற்கு உட்பட்ட புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர், பால் வியாபாரி கணேசன். இவரது வீட்டில் வளர்த்து வந்த நான்கு கறவை பசுக்கள், ஒரு சினை பசு மாடு, ஒரு கன்றுக்குட்டி உள்ளிட்ட ஆறு கால்நடைகள் நேற்று (ஆகஸ்ட் 22) இரவு உயிரிழந்து கிடந்தன. மாடுகள் குடிப்பதற்காக வைத்திருந்த நீரைக் குடித்ததன் மூலம் உயிரிழப்பு நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பொறையார் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கால்நடை மருத்துவர் பாபு மாடுகளுக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

மாடுகள் மேய்ச்சலின்போது விஷத்தை உண்டு இருந்ததா? அல்லது அடையாளம் தெரியாத நபர்கள் விஷம் வைத்து உள்ளனரா? என்று பரிசோதனையின் முடிவில் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும்.

ஒரே நேரத்தில் ஆறு மாடுகள் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.