நாகை மாவட்டம், சீர்காழி அருகே கடல் நீர் உப்பனாற்றின் வழியாகப் பாசன வாய்க்கால்களில் உட்புகுந்து விவசாய விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாகவும், உப்பனாற்றின் குறுக்கே கதவணை கட்ட வேண்டும் என விவசாயிகள் நீண்ட நாள்களாகக் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் நீர்வள ஆதாரத்தை மேம்படுத்துவதற்காக பொதுப்பணித் துறை மூலம் கதவணை கட்டும் பணிகளை இன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.
அதில், சீர்காழி அருகே வெள்ளப்பள்ளம்-திருநகரி உப்பனாற்றின் குறுக்கே 30.96 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவிருக்கும் கதவணை கட்டும் பணியை முதலமைச்சர் காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.