சீர்காழியில் தங்க வியாபாரி வீட்டில் இருவரை கொலைசெய்து கொள்ளையடித்த வழக்கில் மூவர் கைதுசெய்யப்பட்ட நிலையில் ஒருவர் காவல் துறையினரால் சுட்டுக் கொலைசெய்யப்பட்டார். அவர்களிடமிருந்து 17 கிலோ தங்க நகைகள், இரண்டு துப்பாக்கிகள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட ரமேஷ், மனிஷ், கருணாராம் ஆகியோர் வைதீஸ்வரன்கோவில் காவல் நிலையத்தில் இன்று (ஜன. 28) நிலைதடுமாறி கீழே வழுக்கி விழுந்ததில் அவர்களது கையில் முறிவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர்களை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனையடுத்து, அவர்களை மயிலாடுதுறை மாவட்ட நீதிபதி அமிர்தம் முன்னிலையில் முன்னிறுத்தினர்.
அங்கு, குற்றவாளிகளை மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் உள்ள கிளைச் சிறைச்சாலையில் நீதிமன்றக் காவலில் 15 நாள்கள் அடைக்க நீதிபதி அமிர்தம் உத்தரவிட்டார்.
மேலும், கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் என்கவுன்டர் செய்யப்பட்ட இடத்தில் மயிலாடுதுறை மாவட்ட விரைவு நீதிமன்ற நீதிபதி அமிர்தம் உத்தரவின்பேரில் நாகை மாவட்ட நீதிபதி ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வுசெய்தனர்.
இதையும் படிங்க: சீர்காழி நகைக் கொள்ளை: 17கிலோ தங்கம் பறிமுதல்... மூவர் கைது, ஒருவர் சுட்டுக் கொலை!