ETV Bharat / state

சிக்கல் சிங்காரவேலவர் கோயில் தேரோட்டம்! - பக்கதர்கள் பக்தி பரவசம்

நாகப்பட்டினம்: கந்தசஷ்டி விழாவையொட்டி சிக்கல் சிங்காரவேலவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் முருகப்பெருமானின் தேரினை வடம்பிடித்து இழுத்து வந்தனர்.

sikkal sinagaravelar temple
author img

By

Published : Nov 2, 2019, 2:40 PM IST

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு இணையான தலமாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கல் சிங்காரவேலவர் கோயில் விளங்குகிறது. இத்தகைய சிறப்புகொண்ட சிக்கல் சிங்காரவேலவர் கோயிலின் கந்த சஷ்டிப் பெருவிழா 28ஆம் தேதி தொடங்கி 6ஆம் முடிவடையவுள்ள நிலையில், நாள்தோறும் சிங்காரவேலவர் சுவாமி தங்க மயில் ரிஷப வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.

இந்நிலையில், சிக்கல் சிங்காரவேலவர் கோயிலின் திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. அப்போது, பக்தர்கள் தேரினை வடம்பிடித்து தொடங்கிவைத்தனர். அதன்பின், தேரானது நான்கு மாட வீதிகள் வழியாகச் சென்று ஆலயத்தை வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து, இரவு ஆலயத்துக்குள் எழுந்தருளிய முருகன், அன்னை வேல் நெடுங்கண்ணியிடம் சக்திவேல் பெற்றார்.

அப்போது, ஆவேசத்தில் மனிதர்களுக்கு வியர்வை வருவதுபோல் முருகப்பெருமானின் திருமேனியில் வியர்வை துளிகள் ஏற்பட்டது. ஆலய அர்ச்சகர் துணியால் சிலையை பலமுறை துடைத்த போதும் தொடர்ந்து வியர்க்கும் அபூர்வ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

சிக்கல் சிங்காரவேல் தேரோட்டம்

கந்தசஷ்டி விழாவையொட்டி இன்று நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: செண்பகவல்லி அம்மன் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா

Intro:கந்தசஷ்டி விழாவையொட்டி நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் முருகப்பெருமானின் தேரினை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.Body:கந்தசஷ்டி விழாவையொட்டி நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் முருகப்பெருமானின் தேரினை வடம் பிடித்து இழுத்து வந்தனர்.

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு இணையான தலமாக, நாகை மாவட்டத்தில் உள்ள சிக்கல் சிங்காரவேலவர் கோவில் விளங்குகிறது. இத்தகைய சிறப்பு கொண்ட சிக்கல் சிங்காரவேலவர் கோவிலின் கந்த சஷ்டிப் பெருவிழா 28 -தேதி துவங்கி, நாள்தோறும் சிங்காரவேலவர் சுவாமி தங்க மயில் ரிஷப வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.

இந்நிலையில், சிக்கல் சிங்காரவேலவர் கோயிலின் திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. தேரினை பக்தர்கள் வடம்பிடித்து தொடங்கி வைக்க தேரானது நான்கு மாட வீதிகள் வழியாக சென்று ஆலயத்தை வந்தடைந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கந்தனுக்கு அரோகரா முருகனுக்கு அரோகரா என முருகப்பெருமானின் தேரினை வடம் பிடித்து இழுத்து வந்தனர். கந்தசஷ்டி விழாவையொட்டி சிக்கல் சிங்காரவேலவர் கோயிலின் முக்கிய நிகழ்ச்சியான முருகப்பெருமான் தன் தாயிடம் வேல் வாங்கியதும் திருமேனி எங்கும் வியர்வை பொழியும் அருட்காட்சி தரும் நிகழ்ச்சி இன்று இரவு சிக்கலில் நடைபெறுகிறது.

இதில் கோவிலில் வீற்றிருக்கும் வேல் நெடுங்கண்ணி அன்னையிடம் முருகப்பெருமான் சக்தி வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரனை சம்காரம் செய்தது குறிப்பிடத்தக்கது. கந்தசஷ்டி விழாவையொட்டி இன்று நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.