ETV Bharat / state

இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய எஸ்ஐ: பணியிடை நீக்கம் செய்து ஐஜி நடவடிக்கை! - nagai district news

நாகை: இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய காவல் உதவி ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து ஐஜி ரூபேஷ்குமார் மீனா உத்தரவிட்டுள்ளார்.

பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய எஸ்.ஐ பணியிடை நீக்கம்

author img

By

Published : Sep 1, 2020, 2:59 PM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள வில்லியநல்லூரைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ (25). அதே மாவட்டத்திலுள்ள தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்தவர் விவேக் ரவிராஜ். இவர் வலிவலம் காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இருவருக்கும் இடையே 2018ஆம் ஆண்டு முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது.

பின்னர் அந்த நட்பானது காதலாக மாறி இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இதனால் சுபஸ்ரீ கர்ப்பமானார். இந்த செய்தி விவேக் ரவிராஜ்க்கு தெரியவர, சுபஸ்ரீயிடம் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சுபஸ்ரீயை அழைத்துச் சென்று கருக்கலைப்பு செய்துள்ளார்.

நாளடைவில் சுபஸ்ரீயிடம் பேசுவதை விவேக் ரவிராஜ் தவிர்த்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த சுபஸ்ரீ, தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி கெஞ்சியுள்ளார். அப்பொழுது தாம் காதலித்ததை வெளியில் கூறினால் குடும்பத்தோடு கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.

இதனால் சுபஸ்ரீ தகுந்த ஆதாரங்களுடன் காவல் உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். மேலும், இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

இதையடுத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாகிய காவல் ஆய்வாளர் மீது மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடுத்தக்கட்ட நகர்வாக இன்று (செப்.1) விவேக் ரவிராஜை பணியிடை நீக்கம் செய்து ஐஜி ரூபேஷ்குமார் மீனா உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக தான் காவல் துறையினரால் கைது செய்யப்படலாம் என்பதை அறிந்து விவேக் ரவிராஜ் தற்போது தலைமறைவாகியுள்ளார்.

இதையும் படிங்க: பெண்ணின் அந்தரங்க படங்களை வைத்து மிரட்டியவருக்கு போலீஸ் வலைவீச்சு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.