மயிலாடுதுறை நகராட்சியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாதாள சாக்கடைத் திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக நகராட்சி நிர்வாகம் முறையான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளாததால் ஆங்காங்கே கழிவுநீர்க் குழாய்கள் உடைந்து நகர் முழுவதும் கழிவுநீர்மயமாகி வருகிறது.
குறிப்பாக, பழைய பேருந்து நிலையம், அண்ணா வீதி, எடத்தெரு ஆகிய இடங்களில் பாதாள சாக்கடை நீர் சாலையில் வழிந்தோடுகிறது. சில இடங்களில் குளம் போல் சாலைகளில் தேங்கிநிற்கிறது. குறிப்பாக மாமரத்து மேடைப் பகுதியில் கடந்த நான்கு மாத காலமாக கழிவுநீர் வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது.
இதனால் அப்பகுதி வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும், அங்கு வசிப்பவர்களும் மிகுந்த பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். இது குறித்து நகராட்சியிடம் பலமுறை தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், உடனடியாக இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:17 வருடங்களுக்கு பின்னர் ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கை வெளியீடு!