மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள எருக்கூர் (MRM) நவீன அரிசி ஆலை அருகே, கோவிந்தன் என்பவருக்குச் சொந்தமான பழைய இரும்பு குடோனில் மதுபானங்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின் அடிப்படையில், உதவி ஆய்வாளர்கள் மணிகண்ட கணேஷ், முருகன் ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படை காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 82 சாராய கேன்களில் இருந்த 7000 லிட்டர் சாராயம் மற்றும் 55 பெட்டிகளில் இருந்த 2640 குவாட்டர் மது பாட்டில்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து அவற்றை லாரியில் ஏற்றி சீர்காழி மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு கொண்டுச் சென்றனர். பின்னர், இது தொடர்பாக அன்னப்பன்பேட்டை குமார் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இதையும் படிங்க: 800 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு: குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை!