தருமபுரி அடுத்த செட்டிக்கரை பகுதியில் பெரும்பாலான இறைச்சிக் கடைகள் வழக்கம்போல் செயல்பட்டுவந்தன. இந்த இறைச்சிக் கடைகளில் பெரும்பாலான மக்கள் கூட்டம் இறைச்சி வாங்குவதற்காக வந்திருந்தனர். காலை ஐந்து மணி முதலே இறைச்சி வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலைமோதியது.
செட்டிக்கரை அருகே உள்ள கிராமப் பகுதிகளைச் சார்ந்த சிலர் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சிகளை வாங்க வந்திருந்தனர். இதனால் கூட்டம் அலைமோதியது. ரோந்துப் பணியிலிருந்த காவல் துறையினர், இறைச்சி கடைக்காரர்களிடம் அரசின் வேண்டுகோளை ஏற்று, ஒத்துழைப்பு கொடுக்குமாறு தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து இறைச்சி வாங்க வந்திருந்திருந்தவர்களிடமும் காவல் துறையினர் விவரத்தை சொல்லி அனுப்பிவைத்தனர். இதனைத் தொடர்ந்து இறைச்சிக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. பொதுமக்களும் அங்கிருந்து சென்றனர்.
இன்று ஒருநாள் ஊரடங்கு அறிவிப்பால், இறைச்சியின் விலை வழக்கத்தைவிட 100 முதல் 150 வரை உயர்த்தி விற்பனைசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மக்கள் ஊரடங்கில் அமைதியாக அரங்கேறிய திருமண நிகழ்வுகள்