நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் மாவட்ட அளவிலான 13 வயதுக்குட்பட்டோருக்கான கூடைப்பந்தாட்ட தேர்வுப் போட்டிகள் இன்று நடைபெற்றன. இந்திய விளையாட்டுக்கழக ( ஸ்போர்ட்ஸ் அதாரிட்டி ஆப் இந்தியா) விளையாட்டரங்கில் நடைபெற்ற இந்த போட்டிகளில் நாகப்பட்டினம், வேதாரண்யம், சீர்காழி, குத்தாலம், தரங்கம்பாடி, மயிலாடுதுறை, திருமருகல் உள்ளிட்ட ஊர்களில் இருந்து 20அணிகள் பங்கேற்றன.
சிறுவர், சிறுமியர் என இருபிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் அனைவரும் தங்களது திறமைகாளை வெளிப்படுத்தினர். இந்த போட்டிகளில் சிறப்பாக ஆடிய சிறார்கள், நாகை மாவட்ட அணிக்காக தேர்வு செய்யப்பட்டனர். வரும் 10ஆம் தேதி மாநில அளவிலான போட்டிகள் விருதுநகரில் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.