மயிலாடுதுறை: மாவட்டத்தில் 70 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றது. கனமழையால் நெல் மணிகள் முற்றிலும் நீரில் நனைந்தன.
குறைந்தளவு அறுவடை செய்த நெல் மணிகளை விவசாயிகள் அந்தந்த பகுதியில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருகின்றனர். சில வியாபாரிகள் வெளி மாவட்ட நெல் மூட்டைகளை குறைந்த விலைக்கு வாங்கி, சீர்காழி பகுதியில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர்.
இந்நிலையில் வெளி மாவட்ட நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யக் கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனிடையே கடலூரில் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை சீர்காழி அருகே அகணி கிராமத்தில் உள்ள அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் சிலர் விற்பனை செய்ய வந்துள்ளதாக நுகர்பொருள் வாணிப கழகம் அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் நடந்த விசாரணையில் தாடாளன்கோவில் பழைய அரவைமில்லில் பதுக்கி வைத்திருந்த 8 டன் நெல் மூட்டைகளை அலுவலர்கள் கைப்பற்றினர். மேலும் நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி, 2 டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அலுவலர் இளங்கோவன் விசாரனை மேற்கொண்டு வருகிறார்.
இதையும் படிங்க: சூரங்குடியில் மணல் திருடிய மூன்று பேர் கைது!