நாகை மாவட்டம், சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் பல்வேறு இடங்களிலிருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் கடத்தி வரப்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
![seized illegal liquor disposed in nagai Sirkazhi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-ngp-04a-seized-liquier-dispose-script-tn10023mp4_03072020182552_0307f_1593780952_132.jpg)
இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட வெளிமாநில மதுபானங்களை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழிகாட்டுதலோடு, சீர்காழி குற்றவியல் நீதித்துறை நடுவர் தரணிதரன் முன்னிலையில் அழிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
![seized illegal liquor disposed in nagai Sirkazhi](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-ngp-04a-seized-liquier-dispose-script-tn10023mp4_03072020182552_0307f_1593780952_1088.jpg)
இதையடுத்து, சீர்காழி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் முன்னிலையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிமாநில மதுபானங்களை, மதுவிலக்கு அமலாக்க காவல் துறையினர் மண்ணெண்ணெய் ஊற்றி அழித்தனர்.
இதையும் படிங்க... ஓய்வுபெற்ற டிஎஸ்பி காரில் மதுக் கடத்தல்: சினிமா தயாரிப்பாளர் கைது!