மயிலாடுதுறை: சீர்காழி தாலுகா சேத்தூர் கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு இன்று (ஆக.15) ஊர் திருவிழா நடைபெற்றது. இதில், பக்தர்களுக்கு அன்னதான பிரசாதமாக புளிசாதம் வழங்கப்பட்டது.
இதனை சாப்பிட்ட ஐந்து சிறுவர்கள் உள்பட 15 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட அனைவரும் உடனடியாக சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து மணல்மேடு காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 1,896 பேருக்கு கரோனா பாதிப்பு