ETV Bharat / state

விளம்பர மாடல் போன்றது திமுக அரசு மாடல்: முதல்வர் ஸ்டாலினை விளாசிய சீமான்!

திமுக அரசு மத்திய அரசின் கொத்தடிமை என்றும், சல்மான் கான் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் விளம்பரங்களில் மாடலாக நடிப்பதுபோல் முதலமைச்சர் ஸ்டாலினும் ஒரு மாடல் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சல்மான் கான், ஷாருக்கான் போன்று ஸ்டாலின்.. சீமான் கடும் விமர்சனம்!

author img

By

Published : Dec 27, 2022, 12:51 PM IST

நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் சீமான் பேச்சு

மயிலாடுதுறை: சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும், மணல் குவாரிகளில் அனுமதிச்சீட்டு இன்றி மணல் எடுக்கப்படுவதை கண்டித்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பேசிய சீமான், “நாம் தமிழர் கட்சி என்பது மாற்றத்திற்கான கட்சி. குறைகளை கேட்டு வந்த கட்சி அல்ல; தீர்க்க வந்த கட்சி. தமிழ்நாட்டில் தற்போது ஆசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், மாணவர்கள், மீனவர்கள், விவசாயிகள் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவருக்காகவும் வீதிக்கு வந்து போராடி வருகிறது.

ஆனால், தமிழ்நாட்டை ஆளும் ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள், சிறந்த ஆட்சி என்று. இவர்கள் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். இதுதான் திராவிட மாடல் ஆட்சி. திமுக அரசு மத்திய அரசின் கொத்தடிமை. மோடிக்கு எதிராக கருப்பு குடையை கூட விரிக்க தயங்குபவர்கள். வெளியில்தான் வீரமாக பேசுவார்கள். தேர்தல் ஆணையத்தில் நாம் தமிழர் கட்சிக்கு சின்னும் ஒதுக்குவதற்கு கேட்டபோது, முதலில் கேட்ட சின்னம் புலி. அதை அவர்கள் தர மறுத்ததால், பிறகு தேசிய பறவையான மயில் சின்னத்தை கேட்டதற்கும் தேர்தல் ஆணையம் தர மறுத்தனர்.

தேசிய மலரான தாமரையை எதற்கு பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கீடு செய்தீர்கள் என கேள்வி எழுப்பினேன். இறுதியாக தேர்தல் ஆணையம் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கிய சின்னம், விவசாயம். வேளாண்மை என்பது தொழில் அல்ல. வேளாண் தொழில் மகன் நாட்டை ஆண்டால், ஏழை மக்களின் நிலை என்ன என்பதை தெரிந்து செயல்படுவார்கள்.

ஆனால் ஆண்டவர்கள், ஆள்கிறவர்கள் எல்லாம் யார்? அரசு இலவசமாக கொடுத்த பொருட்களை பொதுமக்கள் வீதியில் நின்று போராடி கேட்டது உண்டா? டிவி, மிக்சி, கிரைண்டர், பேன், உங்களுக்கு ஆயிரம் ரூபாய், ஒரு கிலோ அரிசி என திராவிட மாடல் ஆட்சி நடத்துகின்றனர்.

விளம்பரங்களில் நடிப்பது போன்று தற்போது மாடல் என்ற மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சியை திமுக மாடல் ஆட்சி என சொல்லி வருகின்றனர். சல்மான் கான், ஷாருக்கான் விளம்பரம் நடிப்பது போன்று திமுக தலைவர் ஸ்டாலினும் ஒரு மாடல்.

ஏற்கனவே தமிழ்நாட்டில் போதுமான வசதிகளுடன் விமான நிலையம் இருக்கும்போது, மீண்டும் புதிதாக விமான நிலையம் அமைப்பது தேவையற்றது. தற்போது திமுக அமைச்சர்கள் இன்பநிதியே முதலமைச்சராக பார்க்க வேண்டும் என ஆசைப்படுகின்றனர்” என தெரிவித்தார்.

இந்த கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிர்‌ பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் காளியம்மாள், கவிதா அறிவழகன், மாநில சுற்றுச்சூழல் துணைத்தலைவர் காசிராமன், மாவட்ட செயலாளர் தமிழன் காளிதாஸ், மயிலாடுதுறை பாராளுமன்றச் செயலாளர் கலிபெருமாள், சீர்காழி தொகுதி செயலாளர் ஜவஹர் உள்ளிட்ட சீர்காழி,‌ மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: இந்தித் திணிப்பு கல்வித் துறையின் மறுமலர்ச்சி? மத்திய அமைச்சரை விளாசிய மதுரை எம்.பி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.