நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரத்தில் 1000 ஏக்கரில் நெல், நிலக்கடலை, சவுக்கை, வெள்ளரி, கத்தரி, புடலை உள்ளிட்டவைகள் விவசாயம் செய்யப்பட்டு வருகின்றன. அப்படியிருக்கையில் புயல், தொடர் கனமழை உள்ளிட்டவைகளின் போது கப்பலோட்டி மண்டுவாய், பூச்சி மண்டுவாய், புலி குத்தி காடு மண்டுவாய் பகுதிகளில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கடல் நீர் புகுந்துவிடுகிறது.
அதனால் அங்கு சாகுபடி செய்யப்பட்ட பயிர்கள் நாசமாகிவருகின்றன. அதைத்தொடர்ந்து, தற்போது ஆம்பன் புயல் காரணமாக ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தால் கடல்நீர் விளை நிலங்களில் புகுந்துள்ளது. எனவே, அப்பகுதி விவசாயிகள் பேரிடர் காலங்களில் கடல்நீர் ஊருக்குள் புகாதபடி மூன்று இடங்களில் தடுப்பணைகளை கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ராட்சத குழாய் உடைப்பு - உப்புநீரில் கலக்கும் குடிநீர்