நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 8ஆம் வகுப்பு மாணவன் வி.எஸ்.சந்தோஷ் என்பவர் பூர்ணா சலபாசனா யோகாவில் உலக சாதனைப் படைத்துள்ளார்.
யுனிவர்சல் அச்சீவர்ஸ் புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ், ப்யூச்சர் கலாம்ஸ் புக்ஸ் ஆப் ரெக்கார்ட்ஸ் என்ற அமைப்பினரால் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், மாணவன் சந்தோஷ் 'பூர்ணா சலபாசனா' யோகா செய்துகொண்டே ஒரு நிமிடத்தில் 52 பந்துகளை ஒரு திசையில் இருந்து, எதிர் திசைக்கு கால்களால் எடுத்து வீசி முதல்முறையாக உலக சாதனைப் படைத்தார்.
மாணவனின் இந்தச் சாதனை முயற்சியை அப்பள்ளி மாணவ, மாணவியர் உள்பட ஏராளமானோர் கண்டு ரசித்தனர். மேலும், மாணவன் சந்தோஷையும் வெகுவாகப் பாராட்டினர்.
இதையும் படிங்க: ஐந்து வயதில் சிலம்பம் சுழற்றும் சாதனை சிறுமி!