ETV Bharat / state

2 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பெற்றோருடன் இணைந்த மகன் - ஓர் நெகிழ்ச்சி சம்பவம்! - மாணவனை கண்டுபிடித்த காவல்துறை

நாகப்பட்டினம்: இரண்டு ஆண்டுகளுக்கு முன் காணாமல்போன பள்ளி மாணவனை கண்டுபிடித்து காவல்துறையினர் பெற்றோருடன் ஒப்படைத்துள்ளனர்.

nagapattinam
author img

By

Published : Nov 13, 2019, 9:13 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி அடுத்த ஆலவேலி கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவரின் மகன் விக்னேஷ் (19). இவர் 2017ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது படிப்பில் நாட்டமின்றி வீட்டிலிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு சென்னை சென்றுள்ளார். இதனையடுத்து பெற்றோர் தன் மகன் விக்னேஷ் காணவில்லை என சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரைப் பெற்றுக்கொண்ட சீர்காழி காவல் துறையினர் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் காணாமல்போன, மாணவன் குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காணாமல்போன பள்ளி மாணவன் விக்னேஷ் சென்னை வடபழனியில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வருவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

இந்தத் தகவலின் அடிப்படையில் பள்ளி மாணவன் வேலை செய்து வந்த உணவகத்திற்குச் சென்று விக்னேஷை மீட்டு, பெற்றோரிடம் காவல் துறையினர் ஒப்படைத்தனர்.
இரண்டு ஆண்டுகளாக தன் பிள்ளையைப் பிரிந்திருந்த பெற்றோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினத்தைச் சந்தித்து மகனை கண்டுபிடித்து கொடுத்ததற்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.

இதையும் படிங்க: காணாமல்போன பள்ளி மாணவி: காரணம் இதுதான்!

Intro:இரண்டு ஆண்டுக்கு முன் காணமல் போன பள்ளி மாணவன்: பெற்றோருடன் ஒப்படைத்த காவல்துறை.
Body:இரண்டு ஆண்டுக்கு முன் காணமல் போன பள்ளி மாணவன்: பெற்றோருடன் ஒப்படைத்த காவல்துறை.

நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி அடுத்த ஆலவேலியை கிராமத்தை சேர்ந்த பாஸ்கரன் மகன் விக்னேஷ் (19) இவர் கடந்த 2017 -ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்து கொண்டு இருந்த போது படிப்பில் நாட்டம் இன்றி வீட்டில் இருந்த பணத்தை எடுத்து கொண்டு சென்னை சென்றுள்ளான். இதனையடுத்து பெற்றோர் தன் மகன் விக்னேஷ் காணவில்லை என சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரை பெற்றுக்கொண்ட சீர்காழி காவல் துறையினர் நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் சீர்காழி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வந்தனா மேற்பார்வையில் சீர்காழி காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் விசாரணை மேற்கொண்டதில் காணமல் போன பள்ளி மாணவன், சென்னை வடபழனியில் உள்ள உணவகத்தில் வேலைபார்த்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பள்ளி மாணவன் வேலை செய்து வந்த உணவகம் சென்று பள்ளி மாணவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இந்நிலையில் ,இரண்டு ஆண்டுகளாக தன் பிள்ளையை பிரிந்து இருந்த பெற்றோர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினத்தை சந்தித்து பிள்ளையை கண்டுபிடித்து கொடுத்ததற்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்து சென்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.