ETV Bharat / state

ஓட்டப்பந்தயத்தில் பள்ளி மாணவன் மயங்கி விழுந்து மரணம்; பாமக, பாஜகவினர் போராட்டம்.. மயிலாடுதுறையில் நடந்தது என்ன? - Student died in race track in Tamil Nadu

Student died issue- protest underway: தரங்கம்பாடி அருகே காட்டுச்சேரியில் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், பள்ளி நிர்வாகத்தை கண்டித்து பாஜக, பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 25, 2023, 5:42 PM IST

ஓட்டப்பந்தயத்தில் பள்ளி மாணவன் மயங்கி விழுந்து மரணம்; பாமக, பாஜகவினர் போராட்டம்.. மயிலாடுதுறையில் நடந்தது என்ன?

மயிலாடுதுறை: தரங்கம்பாடி அருகே காட்டுச்சேரியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான தடகளப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், பங்கேற்ற 12ஆம் வகுப்பு மாணவன் ரிஷிபாலன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில், உரிய நேரத்தில் மாணவனுக்கு முதலுதவி அளிக்காமலும், போட்டியை தாமதமாக துவங்கியதாகவும், காலம் தாழ்த்தி மாணவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் குற்றம்சாட்டி மாணவனின் உறவினர்கள், பாஜக, பாமக என ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா கருவிழந்தநாதபுரம் வடக்கு தெருவை சேர்ந்த கூலி வேலை செய்யும் சரவணன் - நித்தியா தம்பதியின் மகன் ரிஷிபாலன்(17). இவர் செம்பனார்கோவிலில் இயங்கிவரும் தாமரை மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். இம்மாணவன் காட்டுச்சேரி ஊராட்சி சமத்துவபுரம் விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்த குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டார்.

400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஓடிய ரிஷிபாலன் திடீரென மயங்கி சுருண்டு விழுந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து உடனடியாக அங்கிருந்தவர்கள் ரிஷிபாலனை மீட்டு பொறையார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே ரிஷிபாலன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அறிந்து வந்த மாணவனின் தாயார் நித்தியா மற்றும் உறவினர்கள் மாணவனுக்கு முதலுதவி சிகிச்சையளிக்காமல் காலதாமதம் செய்து அலட்சியப்படுத்தியதால் மாணவன் ரிஷிபாலன் உயிரிழந்து விட்டதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

போட்டியை துவங்கி வைக்க கல்வித்துறை அதிகாரிகள் 3 மணி நேரம் தாமதமாக வந்ததாகவும், மாணவன் ரிஷிபாலன் மதியம் மூன்று மணிக்கு மயங்கி விழுந்ததாகவும்; ஆனால், மாணவனை மாலை 6 மணிக்கு பொறையார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் மேலும் குற்றம்சாட்டு எழுந்துள்ளது.

அதோடு, மாணவன் மயங்கிய தகவல் பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ள உறவினர்கள் மாணவன் மயங்கி விழுந்தவுடன் முதலுதவி சிகிச்சை செய்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்தால் உயிர் பிழைத்திருப்பான் என்றும் மாணவனின் உயிரிழப்பிற்கு மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி நிர்வாகத்தினர் அனைவரின் பொறுப்பின்மையால் மாணவன் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறி பொறையார் காவல் நிலையத்தில் மாணவனின் தாயார் நித்தியா புகார் அளித்துள்ளார்.

வேறு யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது: பெற்றோர் கண்ணீர்: மேலும், தனது மகனுக்கு ஏற்பட்ட நிலைமை இனி தமிழ்நாட்டில் ஒருவருக்கும் ஏற்படக்கூடாது என்று கண்ணீர் மல்க மாணவனின் தாயார் நித்தியா நடவடிக்கை எடுக்க கோரியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்த நேரத்தில் விளையாட்டுப் போட்டியில் மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் பொறையார் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மாணவனின் உடல், உடற்கூராய்வுக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடற்கல்வி ஆசிரியரும், பள்ளி நிர்வாகமும் தான் பொறுப்பு?: இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை தொடர்பு கொண்டு கேட்டபோது, குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி காலை 9.00 முப்பது மணிக்கு சரியான நேரத்தில், தான் சென்று துவங்கி வைத்து விட்டதாகவும், அதிகாரிகள் யாரும் காலதாமதம் செய்யவில்லை, அந்த மாணவன் குறித்த முழு விவரமும் அப்பள்ளி உடற்கல்வி ஆசிரியருக்கு தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல், மாணவனைப் பற்றி தெரியாமல் போட்டிக்கு தயார் செய்யாமல், வெற்றி பெற வேண்டும் பள்ளிக்கு பெயர் வேண்டும் என்ற நோக்கத்தில், அப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் செயல்பட்டுள்ளார். ஆகையால் இதற்கும் கல்வி அதிகாரி மீது புகார் கூறுவதை நாம் என்ன சொல்வது? என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற மாணவன் மயங்கி விழுந்து உயிரிழப்பு- ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

இந்நிலையில் இன்று மாணவனின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டும், அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் பள்ளி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியும் மாணவனின் உடலை உடற்கூராய்வுக்கு ஒப்புதல் வழங்காமல் மருத்துவமனை அருகே மயிலாடுதுறை - கும்பகோணம் சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் சஞ்சீவ்குமார் மற்றும் போலீசார் சாலைமறியலில் ஈடுபட்டவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

'அலட்சியத்தால் ஏற்பட்ட மரணம்' என வழக்கு: தொடர்ந்து 174 ( இயற்கைக்கு மாறான) வழக்கு பதிவு செய்யப்பட்டதை, 304 (ஏ) அலட்சியத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு என மாற்றம் செய்வதாக போலீசார் ஒப்புக்கொண்டதை தொடர்ந்து பாஜக, பாமக மற்றும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்தனர். இருப்பினும், மருத்துவமனை வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மாணவனின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற மாணவன் மயங்கி விழுந்து உயிரிழந்த‌ இச்சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, உயிரிழந்த மாணவன் ரிஷிபாலன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காலம் தாழ்த்தப்படும் நடிகை சித்ராவின் மரணம் விவகாரம்: ஆறு மாதங்களுக்குள் முடிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.