ETV Bharat / state

பள்ளிக்குத்தேவையான பொருட்களை சீர் ஆக கொடுத்தல் விழா - நகராட்சி தொடக்கப்பள்ளி

சீர்காழியில் நகராட்சி பள்ளிக்குத் தேவையான பொருட்களை பெற்றோர்கள் சீர்வரிசையாக எடுத்து வந்து தலைமை ஆசிரியரிடம் வழங்கினர்.

பள்ளி மேலாண்மைக்குழு பெற்றோர்கள் சீர் கொடுத்தல் விழா

author img

By

Published : Aug 15, 2022, 9:12 PM IST

மயிலாடுதுறை: சீர்காழி கீழ்தென்பாதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளிக்குத் தேவையான நாற்காலிகள், பிளாஸ்டிக் குடம், சுவர் கடிகாரம் உள்ளிட்டப் பல்வேறு பொருட்களை பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் மாணவ - மாணவியரின் பெற்றோர் சீர் வரிசையாக, ஊர்வலமாக எடுத்து வந்து, பள்ளித் தலைமை ஆசிரியரிடம் வழங்கினர்.

தொடர்ந்து பள்ளியில் படிக்கும் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகளுக்கு அரசுப்பள்ளியில் முதல் முறையாக அபகாஸ் பயிற்சி வகுப்புக்குத் தேவையான உபகரணங்களை இலவசமாக வழங்கியதோடு; 50 மாணவ மாணவிகளுக்கு அபகாஸ் வகுப்பு கட்டணத்தையும் அப்பகுதி நகர் மன்ற உறுப்பினர் ரம்யா தன்ராஜ், அபகாஸ் வகுப்பு ஆசிரியையிடம் வழங்கினார்.

பள்ளிக்குத்தேவையான பொருட்களை சீர் ஆக கொடுத்தல் விழா

இதையும் படிங்க:காமன்வெல்த்தில் தங்கம் வென்ற வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவிக்கு உற்சாக வரவேற்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.