ETV Bharat / state

திறந்துவிடப்படும் பாதாள சாக்கடையால் சுகாதார கேடு: தேர்தல் புறக்கணிப்பு - years

பூம்புகார் தொகுதிக்குட்பட்ட ஆறுபாதி பாசன வாய்க்காலில் பல ஆண்டுகளாக திறந்துவிடப்படும் பாதாள சாக்கடை கழிவுநீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணித்து எதிர்ப்பு தெரிவிக்கப்போவதாக கிராம மக்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பல ஆண்டுகளாக திறந்துவிடப்படும் பாதாளசாக்கடை கழிவுநீரால் சுகாதாரசீர்கேடு

author img

By

Published : Mar 17, 2021, 12:38 PM IST

மயிலாடுதுறை நகராட்சியில் 2007ஆம் ஆண்டு முதல் பாதாள சாக்கடைத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இதில், நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர், குழாய்கள் மூலம் ஆறுபாதியில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சுத்திகரிப்பு செய்து புல் வளர்ப்பதாக திட்டமிடப்பட்டது.

ஆனால், சுத்திகரிப்பு செய்யாமல் பூம்புகார் தொகுதிக்குட்பட்ட ஆறுபாதி கிராமம் சத்தியவாணன் பாசன வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவுநீர் திறந்துவிடப்படுகிறது. மேலும், 10 ஆண்டுகளுக்கு மேலாக பாசன வாய்க்காலில் பாதாள சாக்கடை கழிவு நீர் திறந்துவிடப்படுவதால் 12 ஊராட்சிகளில் உள்ள 50 கிராமங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

துர்நாற்றம் வீசுவதோடு குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை தொற்றுநோய் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். மேலும், 12 ஊராட்சிகளில் உள்ள குளங்களில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலந்துவருகிறது. இதனால் கால்நடைகளும் பாதிக்கப்படுகின்றன. இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம், அமைச்சர், எம்எல்ஏ உள்ளிட்ட அனைவரிடமும் புகார் அளித்தும் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நடக்கவிருக்கிற சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணித்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துவோம் என்றும் 12 ஊராட்சிகளிலும் தேர்தலை புறக்கணிக்க ஆறுபாதி கிராம மக்கள் ஒருங்கிணைப்பு குழுவினர் முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கல்லூரி மாணவர்களுக்கு கரோனா தொற்று: மூடப்பட்ட அரசு பொறியியல் கல்லூரி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.