நாகை மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின் பெயரில் பல்வேறு பகுதிகளில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று கீழ்வேளூர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவ்வழியே வந்த 11 மாட்டு வண்டி மற்றும் டிராக்டரை சோதனை செய்ததில் அதில் வெட்டாற்றில் இருந்து அனுமதி இன்றி கடத்திவரப்பட்ட ஆற்று மணல் இருப்பது கண்டறியப்பட்டது.