நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த அகஸ்தியம்பள்ளியில் 10 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. தற்போது கோடைக்காலம் என்பதால் உப்பு உற்பத்தி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், வங்கக் கடலில் ஆம்பன் புயல் உருவான நாளில் இருந்து வேதாரண்யம், கோடியக்கரை பகுதிகளில் பலத்து காற்றுடன் கடல் சீற்றம் காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள சுமார் 100 ஏக்கருக்கும் மேலான உப்பளங்களில் கடல்நீர் உட்புகுந்ததில் உற்பத்தி செய்யப்பட்ட உப்பு, நீரில் கரைந்து சேதமடைந்துள்ளது.
மேலும், உப்பு பாத்திகளில் தேங்கியுள்ள கடல்நீரை தொழிலாளர்கள் மோட்டார் மூலம் இறைத்து வெளியேற்றி வருகின்றனர். கரோனா வைரஸ் தடுப்பு காரணமாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையால் வாழ்வாதாரம் பாதித்து அதிலிருந்து மீள உப்பு உற்பத்தியை தொடங்கியுள்ள தங்களுக்கு இது பேரடியாக உள்ளதென உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க... உப்புத் தொழில் அழியும் அபாயம்