ETV Bharat / state

பாதுகாப்பு ஒத்திகை: பயங்கரவாதிகள் போர்வையில் இருந்த 7 காவலர்கள் கைது!

நாகப்பட்டினம்: கடலோர மாவட்டங்களில் 'ஆபரேஷன் சாகர்கவாச் என்னும்' பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் பயங்கரவாதிகள் வேடத்தில் இருந்த ஏழு் காவல் துறையினர் கைது செய்யப்பட்டனர்.

ஆபரேஷன் சாகர்கவாச் பாதுகாப்பு ஒத்திகை
ஆபரேஷன் சாகர்கவாச் பாதுகாப்பு ஒத்திகை
author img

By

Published : Feb 7, 2020, 8:07 AM IST

இந்தியா முழுவதும் கடலோர பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக ஆண்டுதோறும் கடலோர மாநிலங்களில் ‘ஆபரேஷன் சாகர்கவாச்’ என்னும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளில் உள்ள 18 சோதனை சாவடிகளிலும், துறைமுக கடல் பகுதிகளிலும் கடலோர பாதுகாப்புக் குழும காவல் துறையினர் நேற்று (பிப். 06) படகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, ஒத்திகைக்காக பயங்கரவாதிகள் போல் வேடமிட்டிருந்த ஏழு காவலர்கள் நாகை துறைமுகம் அருகில் வந்தபோது, அவர்களை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்த கடலோர பாதுகாப்புக் குழும காவல் துறையினர், விசாரணை நடத்தினர்.

அதில், அவர்கள் பயங்கரவாதிகள் போர்வையில் கடலோரப் பகுதிகளில் சதி வேலைகளில் ஈடுபட்டிருந்தது கண்டறியப்பட்டது . இதையடுத்து பயங்கரவாதிகள் போர்வையில் விசைப்படகில் வேடமிட்டு வந்த காவலர்களை, கடலோர பாதுகாப்புக் குழும காவல் துறையினர் நடுக்கடலில் வைத்து கைது செய்தனர்.

ஆபரேஷன் சாகர்கவாச் பாதுகாப்பு ஒத்திகை

நாகை துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டவர்களிடம் மாதிரி வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டு, கடற்கரை காவல் நிலையத்துக்கு அனுப்பிவைத்தனர். பாதுகாப்பு ஒத்திகை காரணமாக நாகை துறைமுக பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: கடலோர பாதுகாப்புக் குழும காவல் துறையின் 'சாகர் கவாச்' ஒத்திகை

Intro:தீவிரவாதிகள் போர்வையில் நாகை துறைமுகத்தில் நுழைய முயன்ற 7 பேரை, கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நடுக்கடலில் வைத்து கைது செய்தனர்:
Body:தீவிரவாதிகள் போர்வையில் நாகை துறைமுகத்தில் நுழைய முயன்ற 7 பேரை, கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நடுக்கடலில் வைத்து கைது செய்தனர்:

இந்தியா முழுவதும் கடலோர பாதுகாப்பை வலுப்படுத்துவதற்காக ஆண்டுகளுக்கு இரு முறை கடலோர மாநிலங்களில் சாகர் கவாச்சி பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று நாகை மாவட்டத்தில் கடற்கரை பகுதிகளில் உள்ள 18 சோதனை சாவடிகளிலும், துறைமுக கடல் பகுதிகளிலும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் படகில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ரோந்து பணியின்போது, ஒத்திகைக்காக தீவிரவாதிகள் போல் வேடமிட்டு 7 காவலர்கள் நாகை துறைமுகம் அருகில் வர, அவர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் தீவிரவாதிகள் போர்வையில் கடலோரப் பகுதிகளில் சதி வேலைகளில் ஈடுபட இருந்தது கண்டறியப்பட்டது . இதையடுத்து தீவிரவாதிகள் போர்வையில் விசைப்படகில் வேடமிட்டு வந்த காவலர்களை, கடலோர பாதுகாப்பு குழும போலீசார் நடுக்கடலில் வைத்து கைது செய்தனர். நாகை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட அவர்களிடம் மாதிரி வெடிகுண்டுகளும் கைப்பற்றப்பட்டு, கடற்கரை காவல்நிலையத்திற்கு அனுப்பிவைத்தனர். பாதுகாப்பு ஒத்திகை காரணமாக நாகை துறைமுக பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.