மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை சாகுபடி முடிவடைவதற்கு முன்னரே மாவட்டத்தில் 104 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுவிட்டன. குறுவை சாகுபடிக்கு பின்னர் விவசாயிகள் நலன் கருதி அக்டோபர் ஐந்தாம் தேதி மட்டும் மீண்டும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.
இதனைக் கண்டித்து விவசாயிகள் மயிலாடுதுறை, திருவாரூர் செல்லும் சாலையில் மழையில் நனைந்த நெல் மூட்டைகளை போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், "60 நாள்களுக்கும் மேலாக 10 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்காக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளது. நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைகின்றன. எனவே அரசு உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்" என கோரிக்கை விடுத்தனர்.
இச்சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பூர் காவல் துறையினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனடிப்படையில் அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இதையும் படிங்க: பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி பாரதிய மஸ்தூர் சங்கம் போராட்டம்!