நாகப்பட்டினம் நகராட்சியில் நாகை முதல் நாகூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆடு, மாடு, குதிரை உள்ளிட்ட கால்நடைகள் சுற்றி திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைவதுடன் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.
இதன் காரணமாக கால்நடைகளின் உரிமையாளர்கள் தங்களது கால்நடைகளை வீட்டில் கட்டி பராமரிக்க வேண்டும் என்றும் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நாகை நகராட்சி ஆணையர் ஏசுராஜ் தெரிவித்துள்ளார்.
சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து நாகை நகராட்சி அலுவகத்தில் ஒப்படைத்தால் ஒரு கால்நடைக்கு 500 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் ஏசுராஜ் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கன்றுக்குட்டி யாருக்கு சொந்தம்... டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள காவல் துறை முடிவு!