தமிழ்நாடு அரசு சார்பாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாய விலைக் கடைகள் மூலம் ஏழை, எளிய மக்களுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், வேளாங்கண்ணி அதிமுக கிளைச் செயலாளர் விநாயகமூர்த்தி என்பவர் அரசு சார்பில் வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகளை வீட்டில் பதிக்கி வைத்திருப்பதாக அப்பகுதியை சேர்ந்த தாமஸ் ஆல்வா எடிசன் என்பவர் வருவாய் துறையினரிடம் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில், வருவாய் துறை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டதில், அவரது வீட்டிலிருந்து இரண்டு மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இலவச வேட்டி, சேலைகள் பறிமுதல் செய்யப்பட்டு காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து வேளாங்கண்ணி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: புழலில் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை கொள்ளை!