நாகை மாவட்ட அரசு மருத்துவமனையில் பொதுப்பணித் துறை சார்பில் இன்று கிருமி நாசினி தானியங்கி அரங்கம் அமைக்கப்பட்டது. இதில் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் இந்த அரங்கத்தின் வழியே வரும்பொழுது அவர்கள் மீது தானியங்கி மூலம் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இதன் மூலம் மற்றவர்களுக்கு நோய் தொற்று பரவாமல் தடுக்கப்படுகிறது.
இதனிடையே கரோனா வைரஸ் தொற்று நோய் அச்சம் காரணமாக அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
எனவே பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் இடங்களில் கிருமி நாசினி தானியங்கி அரங்கத்தை அமைத்தால், நோய் தொற்று பரவுவது தடுக்கப்படும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:விரைவில் நவீன கிருமிநாசினி தெளிப்பான் இயந்திரம் - விஜயபாஸ்கர்!