இந்தியாவில் பாரத் ஸ்டேஜ் 4 என்கிற (பிஎஸ் 4) ரக வாகனங்கள் அனைத்தும் மார்ச் 31ஆம் தேதிக்குள் விற்கப்பட்டு, பதிவு செய்யப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், தற்போது ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பிறகு அந்த வாகனங்களை விற்கவும் முடியாது, பதிவு செய்யவும் முடியாது என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் செல்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
ஏற்கெனவே நிறைய பொதுமக்கள் வாகனங்களை தற்காலிக பதிவு செய்து வைத்துள்ளனர். அவர்கள் அதனை நிரந்தர பதிவு செய்யவேண்டும். அதேபோல், வாகன விற்பனை நிலையங்களில் நிறைய பிஎஸ்4 ரக வாகனங்கள் விற்பனையாகாமல் தேங்கியுள்ளது.
வட்டாரப் போக்குவரத்துத் துறை அலுவலகங்கள் மார்ச் 31ஆம் தேதிவரை இயங்கும் என்றும், வாகனங்களை பதிவு செய்ய வரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவும், கரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாகவும் வாகனங்களை பதிவு செய்ய எடுத்துச் செல்வதில் மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
எனவே மத்திய, மாநில அரசுகள் இப்பிரச்னையை உச்சநீதிமன்றம் கவனத்திற்கு கொண்டு சென்று, பிஎஸ்4 ரக வாகனங்களை விற்பனை செய்யவும், பதிவு செய்வதற்கான காலக்கெடுவையும் நீட்டித்து தரவேண்டும் என மயிலாடுதுறை சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் சி.செந்தில்வேல் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனாவை துல்லியமாக கண்டறியும் கருவி விரைவில் அறிமுகம்!