தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் அரசியல் சமுதாய பேரியக்க தலைவரும் பாஜக ஆதரவாளருமான வேலூர் இப்ராஹிம், நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி, நாகூர் ஆகிய பகுதிகளில் இன்று (நவ.3) மத நல்லிணக்க பரப்புரை யாத்திரையில் ஈடுபட இருந்தார்.
வேளாங்கண்ணியில் தனியார் விடுதியில் தங்கிருந்த வேலூர் இப்ராஹிமிடம் நாகை டிஎஸ்பி முருகவேல் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 10 ஆய்வாளர்கள் 100க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
டிஎஸ்பி முருகவேல் மத நல்லிணக்க பரப்புரை யாத்திரை மேற்கொண்டால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். பாஜக சார்பில் எந்தவிதமான அனுமதி கடிதமும் காவல் உயர் அலுவலர்களிடம் கொடுக்கப்படவில்லை என வேலூர் இப்ராஹிமிடம் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து மத நல்லிணக்க பரப்புரை யாத்திரை கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் மீலாது விழா பேரணி!