ETV Bharat / state

கூலித்தொழிலாளி தூக்கிட்ட நிலையில் கண்டெடுப்பு: உறவினர்கள் போராட்டம் - மயிலாடுதுறை மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை: கூலித்தொழிலாளி தூக்கிட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கூலித்தொழிலாளி தூக்கிட்ட நிலையில் கண்டெடுப்பு

author img

By

Published : Apr 17, 2021, 6:13 PM IST

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கீழ சட்டநாதபுரம் ஊராட்சியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (42). இவர் செங்கல் சூளையில் பணிபுரிந்துவந்தார். கடந்த சில மாதங்களாக சீனிவாசனுக்கு செங்கல் சூளை உரிமையாளர் சம்பள பாக்கி வைத்துள்ளார்.

அதைக் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 17) அவர் செங்கல் சூளையில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டுக்கப்பட்டார்.

உடனே அங்கு கூடிய அவரது உறவினர்கள் செங்கல் சூளை உரிமையாளர்தான் கொலைசெய்ததாகக் குற்றஞ்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவலறிந்து சம்பவயிடத்திற்கு வந்த வட்டாட்சியர் ஹரிஹரன், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் உயிரிழந்தவரின் உறவினர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

உறவினர்கள் போராட்டம்

தொடர்ந்து, சீனிவாசனின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையும் படிங்க: தனியார் குடோனில் தூக்கிட்ட நிலையில் பிணமாகக் கிடந்த இளைஞர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.