நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை பூக்கடைத் தெருவில் உள்ள காலியிடத்தில் எரிந்த நிலையில் பச்சிளம் குழந்தை ஒன்றின் உடல் கிடப்பதாக மயிலாடுதுறை காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்து.
தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த காவல் துறையினர், குழந்தையின் உடலை மீட்டனர். அதையடுத்து குழந்தையின் உடல் உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
காவல் துறையினர் அருகில் உள்ள கண்காணிப்பு படக்கருவியின் காட்சியைக்கொண்டு முதற்கட்டமாக விசாரணை நடத்திவருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: குப்பையில் கிடந்த குழந்தை உயிரிழப்பு!