நாகப்பட்டினத்தில் கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் சார்பில் 122 ரேஷன் கடைகளில் விற்பனையாளர் காலி பணி இடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற்றது.
இந்த நேர்முகத் தேர்வுக்கு வேதாரண்யத்தை அடுத்த மறைஞாயநல்லூரை சேர்ந்த செந்தில் குமார் என்ற இளைஞர் வந்தார். அப்போது அவர் பெயரை அலுவலர்கள் அழைக்கும்போது சிறிது நேரம் தாமதமாக சென்றார். இதனால் ஆத்திரமடைந்த துணை பதிவாளர், மயிலாடுதுறை நகர கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் உமாதேவி ஆகியோர் இளைஞரை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான செந்தில் குமார் அலுவலர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு அலுவலர்கள் முடியாது எனக் கூறி விட்டு காரில் சென்றனர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: பெரியகோயிலில் முதியவர்களை அனுமதிக்கக் கோரி வாக்குவாதம்