மயிலாடுதுறை: சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே திமுக நகர கழகம் சார்பாக நகர செயலாளர் சுப்பராயன் ஏற்பாட்டில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கழக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது மேடையில் பேசுகையில், "மத்தியில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாஜக ஆட்சியில் 48 ஆயிரம் கிராமங்களுக்கு நான்தான் மின்சாரம் வழங்கினேன் என மார்தட்டிக் கொள்ளும் மோடிக்கு நான் ஒன்று சொல்கிறேன். கடந்த 1971 - 72 ஆண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரத்தை வழங்கியவர் கருணாநிதி.
-
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி.,
— Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்) (@SMeyyanathan) November 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர திமுக சார்பில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் மாண்புமிகு.ஆ.ராசா… pic.twitter.com/FfOddNGDoL
">முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி.,
— Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்) (@SMeyyanathan) November 1, 2023
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர திமுக சார்பில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் மாண்புமிகு.ஆ.ராசா… pic.twitter.com/FfOddNGDoLமுத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி.,
— Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்) (@SMeyyanathan) November 1, 2023
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகர திமுக சார்பில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் மாண்புமிகு.ஆ.ராசா… pic.twitter.com/FfOddNGDoL
அதேபோல், மனிதனே மனிதன் சுமந்து இழுக்கும் கை ரிக்க்ஷாவை மாற்றி அமைத்து சைக்கிள் ரிக்க்ஷா வழங்கியவர் கருணாநிதி தான். அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா தமிழுக்கும், கருணாநிதிக்கும் என்ன தொடர்பு என பேசி இருந்தார். அதற்கு நான் அரசு நிகழ்ச்சியின் போது உங்களது கனத்த சரிதத்தை எழுந்து நிற்க வைத்து அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தைக் கொண்டு வந்து அரசாணை பிறப்பித்தவர் கருணாநிதி என்று அப்போது திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கூறினேன்.
எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் விவசாயிகள் 1 யூனிட்டுக்கு 1 பைசா குறைப்பதற்காக போராட்டம் நடத்தி துப்பாக்கிச் சூடு வாங்கினார்கள் என்பது வரலாறு. அதன்பின், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட உடன் விவசாய சங்கத்தினரை அழைத்து கருணாநிதி குறைகளைக் கேட்டறிந்தார். பின்னர், இனி விவசாயிகள் மின்சாரத்துக்கு ஒரு பைசா கூட கட்டத் தேவையில்லை என விவசாயிகளின் மீது அக்கறைக்கொண்டு இலவச மின்சார திட்டத்தைக் கொண்டு வந்தார்.
இந்த திட்டத்தை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத் மற்றும் பஞ்சாப் நடைமுறைப்படுத்தியது. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்ற சட்டத்தை அமல்படுத்தியவர் கருணாநிதி தான்" என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பொதுக்கூட்டத்தில் பேசினார்.
இந்நிகழ்வில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் மற்றும் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் உள்ளிட்ட திமுக நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:டயர் வெடித்ததில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து... 15 பேர் படுகாயம்..! வைரலாகும் வீடியோ..!