ETV Bharat / state

மழைவேண்டி கழுத்தளவு நீரில் வருண ஜெபம்! - mayilatudurai

நாகை: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய வேண்டி மயிலாடுதுறை ஶ்ரீ மாயூரநாதர் ஆலய தீர்த்த குளத்தில் கழுத்தளவு நீரில் நின்றபடி, வேதபாடசாலை மாணவர்கள் ஒன்பது பேர், ஒரு மணி நேரம் வருண ஜெபம் செய்தனர்.

மழைவேண்டி கழுத்தளவு நீரில் வருண ஜெபம்
author img

By

Published : Jun 16, 2019, 11:18 PM IST

காவிரி ஆறு பாயும் கடைமடை மாவட்டமான நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயலின்போது மழைபெய்தது. அதன்பின்னர் தற்போது வரை மழை பெய்யவில்லை. இதனால் மாவட்டத்தில் உள்ள ஆறு, குளம், ஏரிகள் அனைத்தும் வறண்டு நிலையில், நிலத்தடி நீர் மட்டமும் கிழே சென்றுவிட்டது. இந்த நிலை மாற வேண்டும் என்றும், காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து காவிரியில் நீர் பெருக்கெடுத்து வரவேண்டி கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் ருத்ரஹோமம், வருண ஜெபம் ஆகியவை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அமிர்தவர்ஷினி, ஆனந்தபைரவி ராகங்கள் வாசிக்கப்பட்டன.

மழைவேண்டி கழுத்தளவு நீரில் வருண ஜெபம்

மேலும், ஆலய திருக்குளத்தில் கழுத்தளவு நீரில் நின்றபடி சிவபுரம் வேத சிவாகம பாடசாலையைச் சேர்ந்த ஒன்பது மாணவர்கள் ஒருமணி நேரம் நின்று வருண மந்திரங்களை ஜெபித்து, வருண ஜெபம் செய்தனர்.

Intro:காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ய வேண்டி மயிலாடுதுறை ஶ்ரீ மாயூரநாதர் ஆலய தீர்த்த குளத்தில் கழுத்தளவு நீரில் நின்றபடி, வேதபாடசாலை மாணவர்கள் 9 பேர் 1 மணி நேரம் வருண ஜெபம் செய்தனர்:-

Body:காவிரி கடைமடை மாவட்டமான நாகை மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கஜா புயல் வீசிய அன்று மழை பெய்தது. அதன்பிறகு குறிப்பிடத்தக்க அளவில் மழை பெய்யவில்லை. இதனால் ஆறுகள், வாய்க்கால்கள், குளங்கள், ஏரிகள் அனைத்தும் வறண்ட நிலையில் நிலத்தடி நீர் மட்டம் மிகவும் கீழே சென்று விட்டது. இந்த நிலை மாற வேண்டும் , பருவ மழை தவறாது பெய்யும், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து வரவேண்டியும் மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் ருத்ரஹோமம், வருண ஜெபம் ஆகியவை நடைபெற்றது. தொடர்ந்து அமிர்தவர்ஷினி, ஆனந்தபைரவி ராகங்கள் வாசிக்கப்பட்டன. ஆலய திருக்குளத்தில் கழுத்தளவு நீரில் நின்றபடி சிவபுரம் வேத சிவாகம பாடசாலை மாணவர்கள் 9 பேர் ஆலய தீர்த்த குளத்தில் கழுத்தளவு நீரில் 1 மணி நேரம் நின்றபடி வர்ண மந்திரங்களை ஜெபித்து, வருண ஜெபம் செய்தனர். தொடர்ந்து மழை பெய்வதற்கு உரிய திருப்புன்கூர் தேவாரப் பாடல்கள் பாடப்பட்டன. நாடு முழுவதும் வர்ண பூஜை நடத்த வேண்டும் என்று வேத சிவாகம பாடசாலை முதல்வர் சுவாமிநாத சிவாச்சாரியார் கேட்டுக்கொண்டார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மழை பெய்ய வேண்டி கூட்டு பிரார்த்தனை வழிபாடு நடத்தினர்.

பேட்டி :- சுவாமிநாத சிவாச்சாரியார்- முதல்வர், வேத சிவாகம பாடசாலை

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.