ETV Bharat / state

ஆக்கிரமிப்பு இடங்களை அகற்ற முயன்ற போலீஸ் - தீக்குளிக்க முயன்ற இட உரிமையாளர் - மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் ஆக்கிரமிப்பு இடங்களை அகற்ற முயன்ற காவல் துறையினரிடம் அந்த இடத்தின் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்கிரமிப்பு இடங்களை அகற்ற முயன்ற போலீசார் : தீக்குளிக்க முயன்ற இட உரிமையாளர்

author img

By

Published : Aug 6, 2022, 5:08 PM IST

மயிலாடுதுறை: சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், மயிலாடுதுறை பழங்காவிரி ஆற்றில் உள்ள 44 இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. எஞ்சிய ஆறு இடங்களில் இன்று (ஆக. 6) ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்றது.

கலைஞர் காலனியில் பழங்காவேரி ஆற்றின் கரையோரம் உள்ள சூர்யா, புனிதவதி என்பவரது வீடுகளில் உள்ள ஆக்ரமிப்புகள் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் யுரேகா முன்னிலையில் மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்த ராஜ் தலைமையில் காவல் துறையினர் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்ற முற்பட்டனர்.

அப்போது, குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஒருவர் மண்ணெண்ணெய் கேனை எடுத்துத் தீக்குளிக்க முற்பட்டார். உடனடியாக இதனைக் கண்ட காவல் துறையினர் அவர் உள்பட ஐந்து பேரை பிடித்து காவல் வேனில் ஏற்றினர்.

அப்போது புனிதவதி என்பவர் வீட்டிற்குள் சென்று கதவை சாத்திக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனடியாக உறவினர்கள், வீட்டின் கதவை உடைத்து அவரை மீட்டனர். தொடர்ந்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு வருகின்றன.

ஆக்கிரமிப்பு இடங்களை அகற்ற முயன்ற போலீசார் : தீக்குளிக்க முயன்ற இட உரிமையாளர்

மயிலாடுதுறையைச் சேர்ந்த கணகசுந்தரம் என்பவர் மயிலாடுதுறையில் பழங்காவிரியில் செய்யப்பட்டுள்ள ஆக்ரமிப்புகளை அகற்றக்கோரி கொடுத்த வழக்கின் பேரில் 50 இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகின்றனர். வருகிற ஆக.11ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ததின் விளைவாக நீதிமன்றம் அதற்கு உத்தரவிட்டது.

இதையும் படிங்க: அரசுப்பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 10 பேர் காயம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.