புரெவி புயல் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் தொடங்கிய மழை தொடர்ந்து பெய்துவருகிறது. நேற்று காலை 8 மணிமுதல் இன்று காலை 6.30 மணிவரை அதிகபட்சமாக வேதாரண்யத்தில் 192 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
நாகப்பட்டினத்தில் 134 மில்லி மீட்டர் மழையும், மயிலாடுதுறையில் 122 மில்லி மீட்டர் மழையும், திருப்பூண்டி, தலைஞாயிறு, சீர்காழி, மணல்மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழையும் பெய்துவருகிறது.
நாகப்பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில் சராசரியாக 113 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: புரெவி புயல்: பாம்பனில் 60 கி.மீ. வேகத்தில் வீசும் சூறைக்காற்றால் பொதுமக்கள் அச்சம்