ETV Bharat / state

மயிலாடுதுறையில் கரோனா சிகிச்சை மையத்தில் தரமற்ற உணவு! - Nagapattinam District News

நாகப்பட்டினம்: மயிலாடுதுறையில் கரோனா சிகிச்சை மையத்தில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

நகராட்சி சமுதாய கூடம்
நகராட்சி சமுதாய கூடம்
author img

By

Published : May 2, 2021, 1:34 PM IST

மயிலாடுதுறை மாவட்டம், ஆரோக்கியநாதபுரத்தில் உள்ள நகராட்சி சமுதாயக் கூடத்தில் கரோனா பாதுகாப்பு மையம் உள்ளது. இங்கு கரோனா தொற்றுடையவர்கள் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இவர்களுக்கு மூன்று வேளையும் அரசு சார்பில் உணவு வழங்கப்படுகிறது.

இவ்வாறு வழங்கப்படும் உணவு தரமற்ற முறையில் இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், உணவை உண்ண முடியாமல் கீழே வீசி எறிகின்றனர்.

இந்நிலையில் நேற்று (மே 1) காலை உணவு வழங்கியபோது அதனை வாங்க மறுத்து மீண்டும் திருப்பி அனுப்பினர். இதனால் அங்கு வாக்குவாதம் நடந்தது. பின் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் நோயாளிகளை சமாதனம் செய்து மீண்டும் உணவு வழங்க ஏற்பாடு செய்தனர்.

ஊழியர்களிடம் வாக்குவாதம்

தனியார் மருத்துவமனைகளில் சேர வசதி இல்லாத ஏழைகள் இங்கு சிகிச்சைப் பெற்றுவருவதாகவும், ஆனால் இங்கு உணவு தரமற்று இருப்பதால், அதனை உண்ண முடியவில்லை.

எனவே தரமான உணவு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்வதை செல்போனில் எடுக்கப்பட்ட காணொலியை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கிவருகின்றனர்.

இதையும் படிங்க: கரோனா நிவாரணமாக ரூ.5 ஆயிரம் அரசு வழங்க வேண்டும் - அமைப்புசாரா தொழிலாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.