ETV Bharat / state

நாகை அரசு மருத்துவமனையில் முற்றுகை போராட்டம்! - நாகப்பட்டினம் சுகாதாரத் துறை

நாகப்பட்டினம்: இறந்த குழந்தையுடன் உறவினர்கள், பொதுமக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Government Hospital
Protest at Nagapattinam
author img

By

Published : Jul 31, 2020, 5:47 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த வடுகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த அருள்தாஸ் என்பவரது மனைவி மகாலட்சுமி. இவர் பிரசவத்திற்காக வடுகச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவர் இல்லை எனக் கூறி நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து ஆம்புலன்ஸ் வராததால் தனியார் வாகனம் மூலம் நாகப்பட்டினம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது மருத்துவமனைக்கு செல்லும் வழியில் நரியங்குடி என்ற இடத்தில் வாகனத்திலேயே குழந்தை பிறந்து சிறிது நேரத்தில் அக்குழந்தை உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், உறவினர்கள், பொதுமக்கள் திரண்டு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த சுகாதாரத் துறையினர் மற்றும் காவல்துறையினர் முற்றுகையில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில், கூடுதல் மருத்துவர் நியமிப்பது, 108 வாகனம் மருத்துவமனையில் நிறுத்துவது என மருத்துவமனை நிர்வாகம் உத்திரவாதம் கொடுத்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.

இதையும் படிங்க: "ஏழு மாதங்களில் 16 யானைகள் உயிரிழப்பு..." கோவை வனப்பகுதியில் என்ன நடக்கிறது?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.