நாகப்பட்டினம்: வடமேற்கு பருவ மழையினால் ஏற்படும் இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள தீயணைப்பு, மீட்பு படையினர் சார்பில் நடைபெற்றது.
சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் அருகே அரசூரில் வரப்போகும் வடமேற்கு பருவ மழையினால் இயற்கை இடர்பாடுகளை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து தீயணைப்பு, மீட்பு படையினர் சார்பில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வடகிழக்கு பருவமழை, கரோனா தொற்று கண்காணிப்பு அலுவலர் முனியநாதன், மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் மயிலாடுதுறை சிறப்பு அலுவலர் லலிதா மயிலாடுதுறை மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, தீயணைப்பு மீட்பு துறை, பொதுபணித்துறை, மருத்துவத்துறை, வருவாய்த்துறையினர் ஆகியோர் கலந்துகொண்டு ஆய்வு செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் இயற்கை இடர்பாடு ஏற்படும் நேரத்தில் எப்படி தப்பித்துக் கொள்வது என்பது குறித்து செயல்விளக்கம் மூலம் செய்து காண்பிக்கப்பட்டது. குளத்தில் தத்தளிப்பவரை தீயணைப்பு துறையினர் மீட்கும் காட்சி செயல்முறை விளக்கம் அளிக்கபட்டது.
அதனைத் தொடர்ந்து கண்காணிப்பு அலுவலர் முனியநாதன் கூறுகையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழையை எதிர் கொள்ள அனைத்துதுறை அலுவலர்கள் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு தாலுகா வாரியாக அமைக்கப்பட்டுள்ளது. சாலையில் மரங்கள் திடீரென முறிந்து விழுந்தால் அவைகளை துரிதமாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளவும் பொதுமக்கள் இயற்கை சீற்றங்களில் இருந்து தப்பித்துகொள்ள அனைத்து துறை அலுவலர்கள் சார்பில் பயிற்சி அளிக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. என்றார்.
முன்னதாக பேரிடர்காலத்தில் சாலையில் விழும் மரங்களை எவ்வாறு அகற்றுவது கூறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்ட்து. மேலும் பேரிடர் காலத்தில் உள்ள அவசரகால உதவி எண் அறிவிக்கபடுமென நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் பிரவீன் நாயர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மதுரை- நாகர்கோவில்; 3 மணி நேரத்தில் வந்த கிட்னி!