ETV Bharat / state

கொரோனா எதிரொலியால் தர்ணா போராட்டம் ஒத்திவைப்பு - நாகப்பட்டினம் மாவட்டச் செய்திகள்

நாகப்பட்டினம்: கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இஸ்லாமிய அமைப்பினர் நடத்திய தர்ணா போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

nagapatinam
nagapatinam
author img

By

Published : Mar 17, 2020, 10:23 AM IST

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி நாகப்பட்டினம் வடக்கு மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் ‘மயிலாடுதுறை ஷாஹின் பாக்’ எனும் பெயரில் மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் தொடர் தர்ணா போராட்டம் நடைபெற்றுவந்தது.

தர்ணா போராட்டம் ஒத்திவைப்பு

பெண்கள் உள்ளிட்ட அனைத்து இஸ்லாமிய அமைப்பினரும் ஈடுபட்டுவந்த இந்தத் தொடர் போராட்டம், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. நேற்றிரவு 9 மணி அளவில் நடைபெற்ற அவசர ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அப்துல் சாதிக் தெரிவித்தார். அதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துச் சென்றனர்.

இதையும் படிங்க: சுகாதாரமற்ற குடிநீர் வழங்கல்: அதிமுக எம்எல்ஏ போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.