நாகப்பட்டினம்: தமிழ்நாட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கடலோர மீனவ கிராமங்களில் சுருக்குமடி வலை பயன்படுத்த ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சுருக்குமடி வலை பயன்படுத்தும் மீனவ கிராமங்களான பூம்புகார், திருமுல்லைவாசல், சந்திரபாடி, நம்பியார் நகர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் இரண்டு ஆண்டுகளாக சுருக்குமடி வலை பயன்படுத்த முடியாமல் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருவதாக கூறி அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். ஆனால் தமிழ்நாடு அரசு இதுவரையில் அனுமதியளிக்கவில்லை.
குழந்தைகளைப் படிக்க வைக்கவும், குடும்பம் நடத்தவும் முடியாமல் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருவதால் அரசு உடனடியாக சுருக்குமடி வலை மீதான தடையை நீக்கி மீனவர்கள் இடையே ஏற்படும் மோதல்களுக்கு சுமுகமாக தீர்வு கண்டு மீனவர்கள் வாழ்வாதாரம் உயர்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் என பூம்புகார் மீனவர்கள் ஊர்க்கூட்டம் போட்டு தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க: 17% மேல் ஈரப்பதம் - நெல் கொள்முதல் செய்யப்படாததால் விவசாயிகள் அவதி