புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் இருந்து தமிழ்நாட்டிற்கு மது பாட்டில்களும் சாராயமும் கடத்திவருவது தொடர்கதையாக இருந்துவருகிறது.
இந்நிலையில் நாகையில் மது கடத்தல் தடுப்புப் பிரிவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். அப்போது மருங்கூர் அருகே சந்தேகப்படும்படி மூன்று இருசக்கர வாகனங்களில் ஏழு பேர் வந்தனர்.
இதனையடுத்து அந்த இருசக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் இருசக்கர வாகனங்களில் புதுச்சேரி சாராயம் கடத்திக் கொண்டு வந்ததை கண்டறிந்தனர்.
உடனே அவர்களை கைது செய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்து 190 லிட்டர் சாராயத்தை கைப்பற்றியும் கடத்தலுக்கு பயன்படுத்திய மூன்று இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.