போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்கும் வகையில் ஐந்து வயதிற்குள்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்படுகின்றன. விடுபட்ட குழந்தைகள், மேலும் ஒரு தவணை மருந்து அளிக்கும் வகையில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. நாகை மாவட்டத்தில் ஆயிரத்து 27 மையங்களில் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 471 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
அதன்படி நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா சங்கரன்பந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இதை பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். பவுன்ராஜ் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளித்து தொடங்கிவைத்தார். இதில் தலைமை மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் வாசிங்க: ஜல்லிக்கட்டு: காளை முட்டியதில் சிறுமி உள்பட 30 பேர் காயம்