செங்கல்பட்டு மாவட்டத்தில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிக்க, பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மதுராந்தகம் அடுத்த பொறையூர் கிராமத்தில், ஒரு வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுக்க பரிசுப் பொருள்கள் குவித்துவைக்கப்பட்டுள்ளதாகப் பறக்கும் படையினருக்குத் தகவல் கிடைத்தது.
பரிசுப் பொருள்கள் பறிமுதல்
இதனையடுத்து மேல்மருவத்தூர் ஆய்வாளர் அமல்ராஜ், துணை வட்டாட்சியர் முத்து உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை செய்தனர். அதில், வாக்காளர்களுக்குக் கொடுக்க நூற்றுக்கணக்கான ஹாட் பாக்ஸ்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
அவற்றைக் கைப்பற்றிய பறக்கும் படையினர், அவற்றைப் பதுக்கிவைத்திருந்த சேகர் என்பவரையும் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தல் பரப்புரை நிறைவு!