ETV Bharat / state

நாய்களிடம் அன்பு செலுத்தும் காவல் ஆய்வாளர்! - nagapattinam police

நாகை: காவல் நிலையத்திற்கு வருபவர்களிடம் அன்பாக, பொறுமையுடனும், அமைதியுடனும் நடந்துகொண்டு, அப்பகுதி மக்களின் அன்பை பெற்றது மட்டுமின்றி, அப்பகுதி நாய்களின் அன்பையும் தன்வசப்படுத்தியுள்ளார் காவல் நிலைய ஆய்வாளர்!

police with dogs
author img

By

Published : Oct 13, 2019, 1:32 PM IST

அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செய்ய வேண்டும் என்கிறார் வள்ளலார். அதுபோல அனைத்து மதத்திலும் உலகிலுள்ள எல்லா உயிர்களிடமும் அன்பாய் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

அதனை மெய்ப்பிக்கும் விதமாக, நாகை மாவட்டம், நாகூர் காவல் நிலைய ஆய்வாளராகப் பணிபுரிந்து வரும் ராதாகிருஷ்ணன் திகழ்ந்து வருகிறார். பொதுவாக காவல் அதிகாரிகள் என்றால் அன்பின்றி கோபக்காரர்களாகவும், கடுகடு என்ற குணத்திலும் தான் இருப்பார்கள் என்பது பலரின் பொதுவான கருத்து. ஆனால், அக்கருத்தை மறுக்கும் விதமாக இவர் புகார் தொடர்பாக காவல் நிலையத்திற்கு வருபவர்களிடம் அன்பாகவும், பொறுமையுடனும், அமைதியுடனும் நடந்துகொண்டு அப்பகுதி மக்களின் அன்பை பெற்றுவருகிறார். அது மட்டுமின்றி, அப்பகுதி நாய்களின் அன்பையும் பல்வேறு நற்செயல்கள் மூலம் தன்வசப் படுத்தியுள்ளார்.

நாகை
காவல் நிலைய ஆய்வாளர் ராதாகிருஷ்ணன்

குறிப்பாக, தினந்தோறும் இரவு நேரங்களில் காவல் நிலையத்திற்கு அருகாமையில் பசியுடன் தன் குட்டிகளுடன் சுற்றித்திரியும் நாய்களுக்கு உணவளித்து, அவற்றுடன் தன் அன்பை பரிமாறிக் கொள்கிறார், இந்த மனிதாபிமானமிக்க காவல் ஆய்வாளர்.

பல்வேறு மக்களின் பாதுகாப்பிற்காகவும், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் வகையிலும் காவலர்கள் இரவு பகல் பாராமல், பண்டிகை நாட்களைக் கூட கொண்டாடாமல், தங்கள் குடும்பங்களைப் பிரிந்து காவல் பணியில் இருப்பது பாராட்டுக்குரியதாகும். அவ்வாறான சூழலில் வழக்குகள் தொடர்பாக ’காவல்துறையினருக்கு பலவித மன அழுத்தம் ஏற்படுவது இயல்பு. அதனைப் போக்க அரசு சார்பில் காவலர் நிறைவாழ்வுப் பயிற்சி, யோகா எனப் பல்வேறு செயல்பாடுகளை செய்து வருகிறது.

காவல் நிலைய ஆய்வாளர் ராதாகிருஷ்ணன்

ஆனால், இதுபோன்று இயற்கையோடும் மற்ற ஜீவராசிகளுடனும் சிறிதுநேரம் நேரத்தைச் செலவிடுவது யோகாவைக் காட்டிலும் மன அழுத்தத்தை குறைக்க சிறந்த பயிற்சி என்று புன்னகைக்கிறார்’, காவல் நிலைய ஆய்வாளர் ராதாகிருஷ்ணன். சிறு உயிர்களிடத்திலும் அன்புகாட்டும் காவல் நிலைய ஆய்வாளர் ராதாகிருஷ்ணனின் செயல் பலருக்கும் முன் உதாரணம்.

இதையும் படிக்க: 3டி ஆர்ட்டிஸ்ட் ஒடியத்தின் கண்கவரும் ஓவியங்களின் தொகுப்பு

Intro:நாகை அருகே காவல் ஆய்வாளரை அன்பால் சுற்றிவளைத்த நாய்கள்.

Body:நாகை அருகே காவல் ஆய்வாளரை அன்பால் சுற்றிவளைத்த நாய்கள். அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செய்ய வேண்டும் என்கிறார் வள்ளலார். அது போல அனைத்து மதத்திலும் உலகிலுள்ள எல்லா உயிர்களிடமும் அன்பாய் இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதனை மெய்ப்பிக்கும் விதமாக, நாகை மாவட்டம், நாகூர் காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரிந்து வரும் ராதாகிருஷ்ணன் திகழ்த்துவருகிறார். பொதுவாக காவல் அதிகாரிகள் என்றால் அன்பின்றி கோபக்காரர்களாகவும், கடுகடு என்ற குணத்தில் தான் இருப்பார்கள் என்பது பலரின் பொதுவான கருத்து. ஆனால், அக்கருத்தை மறுக்கும் விதமாக இவர் புகார் தொடர்பாக காவல் நிலையத்திற்கு வருபவர்களிடம்அன்பாக பொறுமையுடனும், அமைதியுடனும் நடந்துகொண்டு அப்பகுதி மக்களின் அன்பை மட்டும் பெற்றது மட்டுமின்றி, அப்பகுதி நாய்களின் அன்பையும் தன்வசம் படுத்தியுள்ளார். இந்த மனிதாபிமானமிக்க காவல் ஆய்வாளர் தினந்தோறும் இரவு நேரங்களில் காவல் நிலையத்திற்கு அருகாமையில் பசியுடன் தன் குட்டிகளுடன் சுற்றித்திரியும் நாய்களுக்கு உணவளித்து, அவைகளுக்கு பிஸ்கட் கொடுத்தும் அவற்றுடன் நாள் முழுவதும் பணிச்சுமையால் தனக்கு ஏற்பட்டும் மன அழுத்தத்தை போக்கி கொள்ளும் விதமாக தன் அன்பை பரிமாறிக் கொள்வார். காவல்துறை என்றாலே, பல்வேறு மக்களின் பாதுகாப்பிற்காகவும், சட்ட ஒழுங்கை காப்பாற்றும் வகையிலும் காவலர்கள் இரவு பகல் பாராமல், பண்டிகை நாட்களில் கூட கொண்டாடாமல், தங்கள் குடும்பங்களை பிரிந்து காவல் பணியில் இருப்பது பாராட்டுக்குரியதாகும். இவ்வாறான சூழலில் வழக்குகள் தொடர்பாக காவல்துறையினருக்கு பலவித மன அழுத்தம் அதிக அளவில் ஏற்படுவது இயல்பு அதனை போக்க அரசு சார்பில் காவலர் நிறைவாழ்வு பயிற்சி, யோகா என பல்வேறானவற்றை செய்து வருகிறது. ஆனால், இதுபோன்ற இயற்கையோடும் மற்ற ஜீவராசிகளும் சிறிதுநேரம் நேரத்தை செலவிடுவது யோகாவை காட்டிலும் மன அழுத்தத்தை குறைக்க சிறந்த பயிற்சி என்று பல வல்லுனர்கள் கூறுகின்றனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.