ETV Bharat / state

மயிலாடுதுறை வெடிவிபத்து; விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா? போலீசார் தீவிர விசாரணை - at Mayiladuthurai Thillaiyadi fireworks warehouse

Explosion at Mayiladuthurai fireworks warehouse: மயிலாடுதுறை அருகே தில்லையாடி கிராமத்தில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட கோரவிபத்தில் கல்லூரி மாணவர் உட்பட 4 பேர் உடல் சிதறி உயிரிழந்த நிலையில், அக்குடோன் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். இந்த கோர விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 5, 2023, 5:38 PM IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா தில்லையாடி கிராமத்தில் மோகன் என்பவருக்கு சொந்தமான ராமதாஸ் ‌ஃபயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசு தயாரிப்பு நிறுவனம் உள்ளது. 2008ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தில் நாட்டு வெடிகள், கோயில் விழாக்கள், திருமணத்திற்கு தேவையான வாணவெடிகள் ஆகியன தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வரும் தீபாவளியையொட்டி வாணவெடிகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன. இதனிடையே, 11 பேர் இதற்கான வேலையில் ஈடுபட்டிருந்த நிலையில், 8 பேர் மட்டும் வெடிகுடோனில் வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தால் அங்கிருந்த வெடிகள் அனைத்தும் வெடித்து சிதறின.

இதனால், சுமார் 10 கி.மீ. தூரத்துக்கு பலத்த வெடி சத்தம் கேட்டதுடன், அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக மாறியது. இந்த விபத்தில் வெடி தயாரிப்பு பணியில் இருந்த நான்கு பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். உடல் பாகங்கள் 500 மீட்டர் தூரம் வரை சுமார் 18-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு மேல் கை, கால், தலை மற்றும் உடலில் உள்ள பாகங்கள் சிதறி கிடக்கின்றன.

இதுகுறித்து தகவலறிந்த தரங்கம்பாடி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, மேலும் வெடி வெடிக்காமல் கட்டுக்குள் கொண்டுவந்தனர். உயிரிழந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பினர். மேலும், சிலரின் உடற்பாகங்களை தேடி வருவதாக கூறப்படுகிறது. இவ்விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், பொறையார் போலீசார் இதுகுறித்து 286, 337, 304, 9(B) (1)(a) (Indian explosive act) இந்திய குறியீடு வெடிபொருள் சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இவ்விபத்தில் தரங்கம்பாடி தாலுகா கிடங்கல் கிராமத்தை சேர்ந்த மாணிக்கம்(32), மூவலூர் கிராமத்தை மதன்(22), கல்லூரி மாணவன் நிகேஸ்(21), ராகவன்(23) ஆகியோர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மேலும் படுகாயமடைந்த மங்கைமடம் பகுதியை சேர்ந்த பக்கிரிசாமி, கடலூர் மாவட்டம் முட்லூரை சேர்ந்த மாசிலாமணி, நாகை மாவட்டம் பொய்யூரை சேர்ந்த மாரியப்பன், தில்லையாடியை சேர்ந்த மணிவண்ணன் ஆகிய நான்கு பேர் நாகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

வெடி தயாரிக்க அமைத்த இரும்பு கொட்டகை கட்டடம் இடிந்து 100 மீட்டர் அளவிற்கு செங்கற்கள் சிதறியதோடு, சிமெண்ட் சீட் சுக்குசுக்காக நொறுங்கின. இவ்விபத்து குறித்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தார். தொடர்ந்து முதற்கட்டமாக, வெடிக்கடையின் உரிமையாளர் மோகன் என்பவரிடம் போலீசார் காவல்நிலையத்தில் போலீசார் விசாரணை செய்துவருகின்றனர். 2008-ல் தொடங்கப்பட்ட இத்தொழிற்சாலை உரிய உரிமத்தோடு இயங்கி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் கூறுகையில், 'தில்லையாடி வெடி மருந்து தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் படுகாயமடைந்து அரசு
மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இது தொடர்பாக, உரிமையாளர் மோகனிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இந்த ஆலை 2023 முதல் 2026 வரை செயல்பட அரசு அனுமதி வழங்கி உள்ளது. மருந்து மிக்சிங் செய்யும்போது தீ பரவி விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், உரிய முறையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக விசாரணையின் முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

மேலும் சம்பவ இடத்திற்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இக்கோரச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உடல்கள் மருத்துவமனையில் உள்ளது. இதையடுத்து, அரசு போதிய நிவாரணம் அறிவிக்கவில்லை என்றும் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கூறி உயிரிழந்தவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அதிக அளவில் வெடி தயாரிப்பில் ஈடுபட்ட நிறுவனத்திற்கு உரிமம் வழங்கிய அதிகாரிகள் மீது துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து தகவலறிந்த மயிலாடுதுறை வட்டாட்சியர் மகேந்திரன், டிஎஸ்பி சஞ்சீவ் குமார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனடிப்படையில் சாலைமறியல் கைவிடப்பட்டது. இதனால், அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: மயிலாடுதுறை வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழப்பு; உறவினர்கள் சாலை மறியல் - உரிமையாளர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.