ETV Bharat / state

சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த காவலர் போக்சோவில் கைது! - police Arrested under pocso act in puthagaram

நாகை: புகாரை விசாரிக்கச் சென்ற இடத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

police Arrested under pocso act in nagai
police Arrested under pocso act in nagai
author img

By

Published : Dec 24, 2019, 11:21 AM IST

நாகை மாவட்டம், புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவருக்குத் திருமணமாகி 15 வயதில் ஒரு மகள் உள்ளார். செந்தில்குமார் குடும்பத் தகராறு காரணமாக, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் காவல்நிலையத்தில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு புகார் அளித்துள்ளார். இந்நிலையில், அந்தப் புகார் சம்பந்தமாக விசாரிப்பதற்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நன்னிலம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரியும் அய்யாசாமி என்பவர் செந்தில்குமாரின் வீட்டிற்கு விசாரணைக்காகச் சென்றுள்ளார்.

அப்போது, வீட்டில் யாரும் இல்லாத நிலையில், சிறுமி மட்டும் தனியாக இருந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி காவலர் அய்யாசாமி சிறுமியிடம் விசாரணை செய்வது போல், பேசி சிறுமிக்கு பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படுகிறது. அதில், பலத்த காயமடைந்த சிறுமியை மீட்டு பெற்றோர் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நன்னிலம் காவல் நிலையத்தில் புகார் அளித்த போது, காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காத காரணத்தால், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரையிடம் சிறுமியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். அதனடிப்படையில், அந்தப் புகார் மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நாகப்பட்டினம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.

காவலர் போக்சோவில் கைது

இதனைத் தொடர்ந்து, மகளிர் காவல் துறையினர் காவலர் அய்யாசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதனிடையே, சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்தது, காவலர் என்பதால் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாகவும், காவலர் அய்யாசாமி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சிறுமியின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் விசாரணைக்குச் சென்ற இடத்தில் 15 வயது சிறுமிக்கு காவலரே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

போதை மாத்திரை கடத்திய மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை!

Intro:நாகை அருகே விசாரணைக்கு சென்ற இடத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் போக்சோ சட்டத்தில் கைது ;Body:நாகை அருகே விசாரணைக்கு சென்ற இடத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் போக்சோ சட்டத்தில் கைது ; நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நடவடிக்கை.

நாகை மாவட்டம், புத்தகரம் கிராமத்தை சேர்ந்த தம்பதியினரின் 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவலர் மீது புகார் எழுந்துள்ளது. புத்தகரம் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் குடும்ப பிரச்சினை காரணமாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் காவல்நிலையத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு புகார் அளித்திருக்கிறார். இந்தநிலையில் அந்தப் புகார் சம்பந்தமாக விசாரிப்பதற்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நன்னிலம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் அய்யாசாமி என்பவர் புத்தகரம் கிராமத்தில் உள்ள அந்த சிறுமியின் வீட்டிற்கு விசாரணைக்காக வந்துள்ளார். அப்போது சிறுமியிடம் விசாரணை நடத்திய காவலர் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து செந்தில்குமார் என்பவர் இது சம்பந்தமாக நன்னிலம் காவல் நிலையத்தில் அளித்த புகாருக்கு போலீசார் நடவடிக்கை எடுக்காத காரணத்தால், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரையிடம் சிறுமியின் பெற்றோர்கள் புகார் அளிக்க சென்றுள்ளனர். புகாரை விசாரித்த திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்துள்ளார். தொடர்ந்து சிறுமி மற்றும் அவரது பெற்றோர் நாகை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து போக்சோ சட்டத்தில் காவலர் அய்யாசாமி கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது காவலர் என்பதால் போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாக கூறியுள்ள சிறுமியின் உறவினர்கள், பாலியல் தொல்லை கொடுத்த காவலர் அய்யாசாமி மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். 15 வயது சிறுமிக்கு விசாரணைக்கு சென்ற காவலரே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.